கிளிப்டன் ரியாலிட்டி ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் 10ம் ஆண்டு துவக்க விழா: வாடிக்கையாளர்களுக்கு 45க்கும் மேற்பட்ட சிறப்பு சலுகைகள் அறிவிப்பு.
கிளிப்டன் ரியாலிட்டி ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் 10ம் ஆண்டு துவக்க விழாவையொட்டியும், ஆயுதபூஜை, தீபாவளி, தசரா பண்டிகையையொட்டியும் வாடிக்கையாளர்களுக்கு 45க்கும் மேற்பட்ட சிறப்பு சலுகைகள் அறிவித்துள்ளனர்.ஈரோடு மாநகரை தலைமையிடமாக கொண்டு கிளிப்டன் ரியாலிட்டி என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் 10ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி வாடிக்கையாளர்களுக்கு 45க்கும் மேற்பட்ட சிறப்பு சலுகைகள் அறிவித்துள்ளனர். இதுகுறித்து கிளிப்டன் ரியாலிட்டி நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை நிர்வாக அலுவலர்(சிஇஓ) ஏ.எஸ்.விக்னேஷ் கூறியதாவது:கிளிப்டன் ரியாலிட்டி நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளாக கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் துறையில் இருந்து வருகிறோம். இந்த 10 ஆண்டில் ஈரோடு மற்றும் கொங்கு மண்டலத்தில் ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கி உள்ளோம். தற்போது, எங்களது நிறுவனத்தின் சார்பில் ஈரோடு பெருந்துறை சாலையில் நந்தா பொறியியல் கல்லூரி பின்புறம் ‘பார்க் ஸ்கொயர்’ என்ற பெயரிலும், ஈரோடு வில்லரசம்பட்டியில் ‘ஸ்டார் சிட்டி’ என்ற பெயரிலும், ஈரோடு சத்தி சாலையில் டிமார்ட் அருகே ‘மிட் டவுன்’ என்ற பெயரிலும், ஈரோடு விஜயமங்கலத்தில் ‘சிட்டி 3.0’ என்ற பெயரிலும், ஈரோடு சோலாரில் ‘சிட்டி 2.0’ என்ற பெயரிலும், கோவை மாவட்டம் துடியலூரில் ‘மெரிடியன்’ என்ற பெயரிலும், கோவை ஆணைக்கட்டி சோழையூரில் ‘பாக்யா லேண்ட்’ என்ற பெயரிலும், கோவை இடிகரையில் ‘பிரஸ்டிஜ் வில்லா’ என்ற பெயரில் 7 பங்களா மாதிரியான வீடுகளும் விற்பனை திட்டங்கள் செயல்படுத்தி வருகிறோம். இந்த பிளாட்டுகளில் 600 சதுர அடி முதல் 3,000 சதுர அடி வரையிலான அளவுகளிலும் வீட்டு மனைகள், ரூ.10 லட்சம் முதல் விற்பனைக்கு உள்ளன. ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, தீபாவளி மற்றும் தசரா ஆகிய நான்கு பண்டிகையையொட்டியும், கிளிப்டன் 10ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டும் வருகிற அக்டோபர் மாதம் 18ம் தேதி பெரிய விழாவாக கொண்டாட உள்ளோம். இவ்விழாவில் எங்களிடம் வீட்டு மனைகளை வாங்கும் அனைவருக்கும் 45க்கும் மேற்பட்ட சிறப்பு சலுகைகள் வழங்க உள்ளோம். இது பிற நிறுவனங்கள் சொல்வது போல வீட்டு மனைகள் வாங்குபவர்களுக்கு தங்க நாணயம் தருகிறோம், கார், எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தருகிறோம் என நாங்கள் சொல்லவில்லை. வாடிக்கையாளர்களுக்கு பயன் இருக்கும் வகையில் அவர்களது வங்கி கடனுக்கான 3 மாத இஎம்ஐ தருகிறோம். பத்திரப்பதிவு செய்யும்போது கிரையச்செலவில் 50 சதவீதம் நாங்களே ஏற்றுக்கொள்கிறோம். இது தமிழ்நாட்டில் எந்த ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனமும் இதுபோல சலுகைகள் வழங்கியது கிடையாது. இது ஒரு பெரிய விஷயம். இதில், ஒரு சிறப்பு சலுகை என்னவென்றால் எங்களிடம் வீட்டு மனைகளை வாங்குபவர்களுக்கு, உடனடியாக வீடு கட்ட நினைத்தால் அவர்களுக்கு பூமி பூஜை முதல் கிரகப்பிரவேசம்(புதுமனை புகுவிழா) நாங்களே முன்னே இருந்து நடத்தி வைக்கிறோம். இதில், எந்த ஒரு 3வது நபரையும் நாங்கள் அனுமதிப்பதில்லை. 2 படுக்கை அறையுடன் கூடிய தனி வீடு கட்டுவதற்கு சுமார் ரூ.35 லட்சம் ஆகிறது என்றால், அதில், 20 முதல் 25 சதவீதம் தள்ளுபடி கொடுக்கிறோம். கிளிப்டன் ரியாலிட்டியில் ஆரம்பம் முதல் தற்போது வரை நாங்கள் ஊருக்கு ஒதுக்குப்புறமாக பிளாட் போட்டதில்லை. சுற்றுப்புறத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கும் பகுதியிலும், நகர்ப்புறத்தை விரைவாக இணைக்கும் வகையிலும் தான் பிளாட் அமைத்து வருகிறோம். எங்களது பிளாட்களுக்கு 18 வங்கிகள் அப்ரூவல் பெறப்பட்டுள்ளது. விரைவாக வங்கி கடன் வசதி கிடைக்கும். தமிழ்நாட்டில் தற்போது பத்திரப்பதிவு என்பது ஆன்லைனில் பதிவு செய்யலாம் என அறிவுறுத்துள்ளது. ஏற்கனவே குஜராத் மற்றும் கர்நாடகா மாநிலத்தில் இத்திட்டம் உள்ளது. தமிழ்நாட்டில் தற்போது இத்திட்டம் வந்தது வரவேற்கத்தக்கது. எங்கு இருந்தாலும் சுலபமாக பத்திரப்பதிவு செய்து கொள்ளலாம். ஆன்லைனில் ஆவணங்கள் சரிபார்த்து, உடனடியாக பத்திரப்பதிவு செய்வதால் 3வது நபர் இல்லாமல் பத்திரப்பதிவு செய்து, நமக்கு மோசடிகள் இல்லாமல் பத்திரப்பதிவு நடக்கிறது. நாங்கள் பிளாட் அமைத்துள்ள இடங்களில், எங்களை விட விலை குறைவாக வீட்டு மனைகளை கொடுத்தால், நான் ரூ.10க்கு எங்களது வீட்டு மனையை கொடுக்கிறேன். இதை உறுதியாக சொல்வதற்கு காரணம், அந்த அளவுக்கு விலை குறைவாகவும், நல்ல இடத்தில் மனைகள் அமைத்துள்ளோம். எனவே, எங்களது நிறுவனத்தின் விழாக்கால சலுகையை பொதுமக்களும், வாடிக்கையாளர்களும் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு விக்னேஷ் கூறினார்.
இந்நிகழ்வின்போது, கிளிப்டன் ரியாலிட்டி நிறுவனத்தின் விற்பனை பிரிவு தலைமை அலுவலர் நரேஷ் (ஈரோடு), சங்கர் கணேஷ் (கோவை) ஆகியோர் உடனிருந்தனர்
பிரபல இசை அமைப்பாளர் தேவா, சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 73. தமிழ், தெலுங்கு, கன்ன...
இலங்கைக்கு கடத்துவதற்காக ரூ.135 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் பதுக்கி வைத்திருந்த நாகையைச் சேர்ந்...
இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை 500 பிளாட் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கத்தி முனையில் மி...