ரூ.100 கோடி மோசடி விவகாரம் : பிடி அரசகுமார் மகன் மற்றும் மகள் வீடுகளில் சோதனை.
சென்னையில பி.டி. அரசகுமாரின் மகன் மற்றும் மகள் வீடுகளில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்று தருவதாக கூறி 100 கோடி ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் பதிவு செய்யப்படாத கூட்டமைப்பு தலைவர் பிடி அரசகுமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பி.டி. அரசகுமாரைக் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கச் சென்னை காவல் ஆணையர் கடந்த ஜூன் 11-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து, பி.டி. அரசகுமாரின் மனைவி கோகிலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், “கடந்த 2024–25 ஆம் ஆண்டில் நடந்ததாகக் கூறப்படும் சம்பவத்திற்கு 2026-இல் வழக்குப்பதிவு செய்து, அவர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் கூறப்படும் குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதைத்தொடரந்து இன்று சென்னை ஓ.எம்.ஆர் (OMR) சாலையில் உள்ள பி.டி. அரசகுமாரின் மகன் மற்றும் மகள் வீடுகளில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனை நடத்தி வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
பிரபல இசை அமைப்பாளர் தேவா, சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 73. தமிழ், தெலுங்கு, கன்ன...
இலங்கைக்கு கடத்துவதற்காக ரூ.135 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் பதுக்கி வைத்திருந்த நாகையைச் சேர்ந்...
இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை 500 பிளாட் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கத்தி முனையில் மி...